அவள் மரித்துக் கொண்டில்லை
வாழ்ந்துகொண்டுடிறுக்கிறாள்..
அவள் தோய்ந்து ஒளியிழந்து
போகவில்லை..
இன்னும் வலிமையாக
பிரகாசமாக ஒளிர்கிறாள்..!
அவள் அழவில்லை..
மாறாக பெரும்புன்னகை செய்துகொண்டுடிருக்கிறாள்,
அவளின் கண்ணீர் அவளின் கால்களை நெருங்கும் வரையிலும்..!
அவளின் கதை
வாழ்க்கை வரலாறு அல்ல
வலிகளின் வரலாறு..!
கடலின் ஒருதுளி அல்ல
அவள்..
ஒரு துளி
கடல் தான் அவள்..!
கரிய நிழல்களால்
நிரப்பப்பட்டவள் அல்ல அவள்..
ஆயிரமாயிரம் ஒளிவிளக்குகளால்
வடிக்கப்பட்டவள் ..!
குரல்கொடுத்து வலிதாங்க
யாருமில்லாதவள் அல்ல அவள்..
அவளுக்கே உரித்தான
தேவ தூதுவள் அவள்..!
அவள் இறந்த கால
ஒளியலைகளின் எதிர்கால
பிரதிபலிப்பல்ல..
நிகழ்கால ஓடையில்
நீந்திக்கொண்டிருக்கும்
அதிசய மீன்..!
தனித்து விடப்பட்டு
நிரகரிக்கப்பட்டவள் அல்ல அவள்..
பட்டு நூல்களின் அன்பு
அதிர்வலைகளில்
கோர்க்கப்படவள்..!
அவளை சாம்பலாக்க முடியாது
அவளின் நம்பிக்கை அவளினுள் ஒளிரும்வரை..!
![](https://static.wixstatic.com/media/dd8edc_d5c7f0676e4f4825bcbdd899167a1e02~mv2.jpg/v1/fill/w_980,h_649,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/dd8edc_d5c7f0676e4f4825bcbdd899167a1e02~mv2.jpg)
Rtr. Ilham Bin Aatham
Comments